யார் இந்த 'பில் கேட்ஸ்'?

  shriram   | Last Modified : 23 Nov, 2016 04:51 pm
கடந்த இரு தலைமுறை உலக மக்களில் இவரை தெரியாதவர்களே கிடையாது. பல வருடங்களாக உலக பணக்கார வரிசையில் முதலிடத்திலே இருந்து வருபவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி "பில் கேட்ஸ்". 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் நாள் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் பிறந்தார். இவரது தந்தை "கெய்ச் கேட்ஸ்" வழக்கறிஞர், தாயார் "மேரி மேக்ஸ்வேல்" பள்ளி ஆசிரியர். ஆரம்பத்திலேயே கூச்ச சுபாவம் உடைய பில் கேட்ஸ் ஒரு தனிமை விரும்பி. சிறுவயதில் இருந்தே கணிதம் மற்றும் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உடையவர். 13 வயதிலேயே லேக்சைட் பாட சாலையில் கணினியில் மென்பொருள் எழுதுவதில் இவர் கொண்ட ஆர்வத்தால் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டார். கணினி கல்வியை கற்பதில் இவருக்கும் இவரது நண்பர் "பால் ஆலன்"க்கும் தீராத தாகம். இருவரும் இணைந்து கணினி நிறுவனம் தொடங்க ஆசை இருந்தும், அது எட்டா கனியாகவே இருந்தது. 1974 ஆண்டு INTEL நிறுவனம் Micro Processor -ஐ அறிமுகம் செய்தது, அதன் ப்ரோக்ராம்மிங் பணிக்கு "Bill Gates" மற்றும் "Paul Allen" உதவியை நாடியது. COBOL, FORTRON, PASCAL மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் BASIC மொழியில் programming எழுதி வெற்றியும் கண்டனர். 1977 ஆண்டு ஆல்புகர்க் நகரில் MICROSOFT நிறுவனத்தை கேட்ஸ் ஆரம்பித்தார். அந்த சிறு நிறுவனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. 1981 ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்னும் OS- ஐ உருவாக்கி மீண்டும் வெற்றி வாகை சூடினார். IBM நிறுவனத்துக்கு போட்டியாக APPLE கணினிகள் அறிமுகமானபோது அதனை கண்டு அசராமல் Microsoft Windows வெளியிட்டு அதில் இமாலய வெற்றி கொண்டார். 1994 ஆண்டு தனது நிறுவனத்தில் பணியாற்றிய மெலின்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிபர் கேத்தரின், ஃபீபி அடேல் என இரு மகள்களும், ரோடி ஜான் என்ற மகனும் உள்ளனர். "Business at the speed of thought" மற்றும் "The road a head" என இவர் எழுதிய நூல்களின் விற்பனையில் இருந்து வரும் தொகையை மனைவியுடன் இணைந்து தொடங்கிய "பில் & மெலிண்டா கேட்ஸ்" என்ற அறக்கட்டளைக்கு வழங்குகிறார். இதுவரை 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நல பணிக்காக வழங்கியுள்ளார். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே என்பதற்கு "பில் கேட்ஸ்" சிறந்த எடுத்துக்காட்டு!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close