இந்திய அரசு தடை செய்த மர்மத் தீவின் ரகசியங்கள்!

  mayuran   | Last Modified : 09 Dec, 2016 10:05 pm

அந்தமானின் வடக்குப் பகுதியில் 72கி.மீ சதுரஅடி பரப்பளவு கொண்ட செண்டினேல் என்றழைக்கப்படும் தீவு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்கின்ற பழங்குடியின மக்கள் ஆதி கால மரபு வழியை பின்பற்றுவதால் இவர்களை யாருமே நெருங்க முடியவில்லை. எத்தனையோ முறை இந்திய அரசாங்கம் அணுகியும் வெளி உலக தொடர்பு வேண்டாம் என்று கடுமையாக எதிர்க்கின்றனர். 1779 இல் இருந்து இவர்களை தொடர்புகொள்ள சென்ற பலரை அவர்கள் கொடூரமாக கொன்றுள்ளனர். அப்போது சுமார் 400 பேர் வரை அங்கு வாழ்ந்ததாகவும், தற்போது 50க்கும் குறைவானவர்களே இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தீவில் ஏற்பட்டுள்ள மர்ம தொற்று நோய் காரணமாக மக்கள் தொகை படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் 1994 ஆம் ஆண்டு இந்த தீவையும் அதை சுற்றி 3கி.மீ கடல்பரப்பை, தடை செய்யப்பட்ட பகுதியாக இந்திய அரசு அறிவித்தது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்ற ஹெலிகாப்டரை நோக்கி கற்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர். அதோடு இந்த தீவினை சுற்றி பவளப்பாறைகள் இருப்பதால் பெரிய கப்பல்கள் அந்த தீவினை நெருங்க முடியாமல் போவது அவர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த தடையை மீறி சென்ற சிலர் திரும்பி வந்தது இல்லை என்றும் தீவில் இருந்து வெளிச்சம் மட்டுமே வருவதாகவும் நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர். எல்லா பொருத்தமும் கரெக்ட்டா இருக்குது... கிங் காங் படத்துல வர்ற தீவு இது தானோ??

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.