சூதாடி தோற்ற கோபத்தில் கிளப்பிற்கு வெடிகுண்டு

  shriram   | Last Modified : 17 Dec, 2016 12:56 pm

1980ல், அமெரிக்காவின் பிரபல சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் உள்ள ஒரு கிளப்பில் ஒரு பெரும் குண்டு வெடித்ததில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அங்கு சூதாடி அதிருப்தியான ஒரு கஸ்டமர் வைத்தது தான் அந்த குண்டு. ஜான் பிர்ஜெஸ் என்ற ஒரு கோடீஸ்வரர் ஹார்வீஸ் ரிசார்ட் என்ற கிளப்பில் சூதாடி கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் தோற்றுவிட்டார். அதன் பின் அந்த க்ளப்பில் ஒரு நவீன வெடிகுண்டை வைத்து, உரிமையாளர்களிடம் 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். போலீஸார், வெடி குண்டு நிபுணர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த க்ளப் மற்றும் அதனோடு இணைந்த ஹோட்டலில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். அந்த குண்டு வெடித்து மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்தது. குண்டு வைத்த பிர்ஜெஸ் கைது செய்யப்பட்டு பின் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close