ஹிரோஷிமா, நாகஸாகி அணுகுண்டுகளில் இருந்து தப்பித்த மனிதர்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்க படைகள் அணுகுண்டுகளை வீசினர். லட்சக்கணக்கானோர் பலியான இந்த சம்பவத்தில், வெளியூரில் இருந்து வந்து ஹிரோஷிமாவில் தங்கியிருந்த சுடோமு யாமகுச்சி என்பவர் அதிசயமாக உயிர் தப்பினார். உடலில் பல காயங்களுடன் இருந்த அவர், கஷ்டப்பட்டு விமானப்படை பாதுகாப்பு தளத்திற்கு சென்றடைந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து காயங்களுக்கு கட்டு போட்டு அனுப்பி வைத்தனர். அதன்பின் அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு சென்றடைந்தார். பல வெளிக்காயங்களுடன் இருந்தாலும், கடமையில் கருத்தாக இருந்த அவர், ஊர் சென்றடைந்த மறுநாளே, அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதியே, தனது அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அலுவலகத்தில் தனது நண்பரிடம் காயங்கள் ஏற்பட்ட கதையை சொல்லி, ஒரே வெடிகுண்டு வெடித்ததில் ஒரு நகரமே எப்படி சின்னாபின்னமானது, என விளக்கி கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த அதே நேரம், அமெரிக்க படைகள் நாகசாகியில் இன்னொரு அணுகுண்டு தாக்குதலை நடத்தினர். குண்டு விழுந்தது இவர் இருந்த பகுதியில் இருந்து 3கிமீ தான். ஆனாலும், அதிசயமாக எந்த காயமும் இல்லாமல் யாமகுச்சி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஒரு காது கேட்கும் திறனை அவர் இழந்தார். அணுக்கதிர்களால் அவருக்கும் அவர் மனைவிக்கும் பல சிறிய உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும், பெரிய பாதிப்புகள் இல்லாமல் ஆரோக்கியமாகவே வாழ்ந்தனர். அவர்களின் பிள்ளைகளும் கதிர்வீச்சு தொடர்பான சில நோய்களால் அவதிப்பட்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு, தனது 93வது வயதில் வயிற்று புற்றுநோயால் யாமகுச்சி மரணமடைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close