• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

டிசம்பர் அழிவு மாதமா ?

  mayuran   | Last Modified : 21 Dec, 2016 06:19 pm

டிசம்பர் என்றாலே தமிழ் நாட்டிற்கு குலை நடுங்கும் இயற்கை பேரழிவுகள் காலம் காலமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் வந்த வர்தா புயலால் நம் கண்முன்னே பல உயிர்கள் காவு வாங்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்களும் நாசமாயின. இவ்வாறான அழிவுகள், இப்போது தொடங்கவில்லை. பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் 1964 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை புரட்டிப் போட்ட ராமேஸ்வரம் புயலை (தனுஷ்கோடி புயல்) குறிப்பிடலாம். அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி இலங்கையின் வடக்கு மற்றும் இந்தியாவின் தென் பகுதியான தனுஷ்கோடி ஊடாக மணிக்கு 280kmph வேகத்தில் கடந்தது. டிசம்பர் 22 ஆம் தேதி ஆரம்பித்த புயல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நீடித்ததால் பேரழிவை இலங்கையின் வட பகுதியும் தனுஷ்கோடியும் சந்தித்தது. புயலால் கடல் சீற்றம் அதிகரித்து கடலலைகள் 20 அடிக்கு மேல் எழுந்து ஊருக்குள் வந்ததால் தனுஷ்கோடி மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. புயலுக்குப் பின் தனுஷ்கோடி நகரம் புதுப்பிக்கப்படவில்லை. காரணம் அங்கு வாழ்ந்த 1800 குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்து போயின. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த புயலால் அப்போதைய மதிப்புப்படி 1019 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியால் பெரும் அழிவை இந்தியாவின் சில கடலோர மாநிலங்கள் சந்தித்தன. 2011 ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது. அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கால் சென்னை மற்றும் கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இனி வரும் காலங்களில், மக்கள் ஒவ்வொரு டிசம்பரையும் அழிவு வரும் என எதிர்பார்ப்பார்களோ என்னவோ???

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close