இயேசு எப்பொழுது பிறந்தார்?

  shriram   | Last Modified : 22 Dec, 2016 07:15 pm

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்தஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்துவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில், இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார். இதற்காக பல சான்றுகளையும் முன் வைக்கிறார். யோவானின் வயது: இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான், இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். அப்படியெனில் காபிரியேல்தூதர், இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்து கூறும்போது யோவானின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் பிறப்பை கவனிப்பது அவசியம். எலிசபெத்து கர்ப்பம்தரித்தது ஜூலை மாதம் என்கிறார் ஆசிரியர். எனவே யோவான் பிறந்தது ஏப்ரல் மாதம் எனில் இயேசு பிறந்த மாதம் அக்டோபர். இயேசுவின் வயது: அதாவது இயேசுவின் மரணநாள், வேதத்தில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம்தேதி, இது ஆங்கில மாதத்தில் ஏப்ரல் முதல் வாரம். இயேசு தமது 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால், அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல, அக்டோபர் என்கிறார் ஆசிரியர். மேய்ப்பர்களும் - ஆட்டு மந்தைகளும்: இயேசு கிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை, என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமான போது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். டிசம்பர் மாதத்தில் பாலஸ்தீனாவில் அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை ஆசிரியர் உறுதியாக சொல்கிறார். ஒளித்திருவிழா: கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. ஆரம்பத்தில் வட ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர், இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் காலமாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கப்பட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர். இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால், டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்தி விட்டனர் என கூறுகிறார். இயேசுவின் ‘பிறந்தநாளை’ கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது. பைபிள் வசனங்களை நாம ஆய்வுக்குட்படுத்தும் போது, இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகிறது. இவ்வாறு எதிர் மறையான கருத்துக்கள் இருந்தாலும் நம் வழக்கப்படி தேவதூதரை கொண்டாடி மகிழ எல்லா காலமும் சிறந்த காலம் தான். டீம் HighQ வின்இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்திடுங்கள்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.