நீண்ட மூக்கு துதிக்கையாக வளர்ந்துவிட்டது...!!

  நந்தினி   | Last Modified : 24 Dec, 2016 05:27 pm
ஆசிய யானைகளை விட மிகப் பெரியதாக இருக்கும் ஆப்பிரிக்க யானைகள், சராசரியாக 3 ஆயிரத்து 500 கிலோ எடை உடையது. ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளும். அதன் தந்தங்கள் மட்டும் ஐந்து மீட்டர் நீளமும், 90 கிலோ எடையும் கொண்டதாகும். பெண் யானைகள் கருத்தரித்து 22 மாதங்களுக்கு பின், போடும் குட்டிகள் பிறக்கும் போதே 90 கிலோ முதல் 135 கிலோ எடை வரை இருக்குமாம். மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடைய யானை, நீரில் நன்றாக நீந்தவும், 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கியும் செல்லும். யானைகளுக்கு வாசனை நரம்புகள் வாயில் இருப்பதால், சுவாசிப்பதும், வாசனை அறிவதும் தும்பிக்கையால் தான் என அறியப்பட்டுள்ளது. "முதன்முதலில் தோன்றிய யானை, பன்றி அளவே இருந்தது. இதனால், யானைகள் பன்றி இனத்தைச் சேர்ந்தது என்றும் ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து பின்பு துதிக்கையாக வளர்ந்தது" எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close