2008-ஆம் ஆண்டு Ronald Ball என்பவர், தான் வாங்கிய Mountain Dew குளிர்பானத்தில் எலி ஒன்று கிடந்ததாகவும், அந்த சோடாவை சற்று அருந்திய பிறகே தான் அதைப் பார்த்ததாகவும், அதனால் ஏற்பட்ட தனது உடல்நலக்குறைவுக்கு PepsiCo நிறுவனம் $50,000 ஆவது நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடந்தார். இதற்குப் பதிலளித்த அந்த நிறுவனம், "Ball கூறுவது பொய். ஏனெனில், அவரது பாட்டில் தயாரித்து 74 நாட்கள் ஆனது. அக்காலத்திற்குள் சோடாவில் உள்ள அமிலம் அந்த எலியை சுத்தமாகக் கரைத்திருக்கும்" என்று பதிலளித்தது.