89 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிரமாண்ட பங்களா

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரிட்டிஷ் வேல்ஸ் நகரில் இருக்கும் பிரம்மாண்டமான பங்களா Shire Hall, உலகப் புகழ் பெற்ற பிரமாண்டமான மாளிகையாக உள்ளது. ஒரு காலத்தில் நீதிபதிகள் தங்குவதற்கென 1829 ஆம் ஆண்டு, 7000 பவுண்டுகளுக்கு கட்டப்பட்ட இந்த பங்களா, தற்போது வெறும் ஒரு பவுண்டுக்கு (இந்திய ரூபாயில் 89) விற்பனை செய்யப் பட்டுள்ளது. 190 வயதைக் கடந்தும்,இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பங்களாவை கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதிகள் கடைசியாக பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த பங்களாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். முழுக்க, முழுக்க இரும்பால் கட்டப்பட்ட இந்த பங்களா, பிரிட்டிஷ் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாகவும், அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.