நமது உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

  mayuran   | Last Modified : 04 Jan, 2017 07:23 pm
மருத்துவ ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை விஞ்ஞானிகள் நிகழ்த்தி வரும் வேளையில், மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இரைப்பையை குடலுடன் இணைக்கும் ஒரு பகுதியானது இத்தனை காலமும் திசுக்களால் ஆன ஓர் அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. தற்பொழுது அதை நடுமடிப்பு (Mesentery) என்று கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் இந்த நடுமடிப்பானது உள் கட்டமைப்புகளை கொண்ட தனி உறுப்பு என கண்டுபிடித்துள்ளார். அடுத்த கட்டமாக இந்த உறுப்பிற்கு ஏற்படும் நோய்களை வகைப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை அறிந்து அதனை குணப்படுத்தும் வழிகளையும் கண்டறியும் பட்சத்தில், வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணமாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close