ஒரு வீடு இரு நாடு

Last Modified : 05 Jan, 2017 09:44 am
ஒரு நாட்டுகுள்ள இரண்டு வீடு வச்சிக்குறது ரொம்ப சாதாரண விஷயம் தான். ஆனா ஒரே வீடு இரண்டு நாட்டுல இருக்க முடியுமா? என்ன வினோதமா இருக்கேனு யோசிக்குறீங்களா? அந்த வினோதம் நடக்குறது கூட நம்ம நாட்லதான். நாகலாந்து மாநிலத்தில் உள்ளது லோங்வா கிராமம், இந்திய மியானமர் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் "ஆங்" என அழைக்கப் படும் கிராம தலைவரின் வீடு தான் அது. இவரது வீட்டிற்கு குறுக்காக இந்திய மியான்மர் எல்லைக் கோடு செல்கிறது. இதனால் மியான்மரில் உணவு உண்டு இந்தியாவில் உறங்கி வருகின்றனர் இக்குடும்பத்தினர். அருணாச்சல் மற்றும் மியான்மரில் உள்ள 70 கிராமங்களுக்கு தலைவராக இருக்கும் ஆங், 60 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். லோங்வா கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளின் குடியுரிமை(இரட்டை குடியுரிமை) உள்ளது. இதனால் இவர்கள் விசா இல்லாமலேயே மியான்மர் சென்று வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களும் இங்கு வந்து இவர்களுடன் இணைந்து விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். என் நாடு உன் நாடு என்ற மனப்பான்மையை களைந்து எல்லைக் கடந்து மனிதம் வளர்க்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த கிராமம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close