ஒரே கடிதத்தை 9 மாதங்களாக எழுதிய ஸ்டான்லி குப்ரிக்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

எந்த நாட்டுத் திரைப்படமானாலும் வரிந்துகட்டிக்கொண்டு பார்க்கும் சினிமாப் பிரியர்களுக்கு, ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick)-கைக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. உலகப் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான இவரின் படங்களில் நடிப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஒரு சாதாரண 'ஷாட்'-டை 50 முறை கூட அலட்டிக்கொள்ளாமல் எடுப்பார், நடிப்பவர் எவ்வளவு பெரிய நடிகரானாலும் சரி. காரணம், இவருக்கு எதிலும் அவ்வளவு சீக்கிரம் திருப்தி வராது. இசை, எடிட்டிங் எனத் தொட்ட விஷயமெல்லாம் மாதக்கணக்கில் போகும், அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை. இவரின் படங்களைப் பார்த்துவிட்டு மிகவும் வியந்துபோன மற்றொரு உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனரான அக்கிரா குரசோவா (Akira Kurosawa), குப்ரிக்கிற்கு ரசிகர் என்ற முறையில் 1998-ல் ஒரு கடிதம் எழுதினார். அதைப் படித்துவிட்டு, அதற்குப் பதில் கடிதம் எழுத முயன்ற குப்ரிக்கிற்குத் தான் எழுதிய கடிதத்தில் திருப்தி ஏற்படவில்லை. பல கடிதங்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் என எழுதி, கடைசியாக அதனை 9 மாதங்கள் கழித்து அரைகுறை மனதோடு முடித்தார். ஆனால், அந்தப் பதில் கடிதம் போவதற்குள் அக்கிரா குரசோவா இறந்தே விட்டார்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.