"பிரேக் - அப்" ஆனவங்க மட்டும் இதப்படிங்க..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்த உலகம் எத்தனையோ காவியக் காதல், ஓவியக் காதல்லாம் பார்த்திருந்தாலும், அதுக்கே சவால் விடற அளவுக்கு இப்போ வாட்ஸ் ஆப் காதல், ஃபேஸ் புக் காதல்லாம் வந்திருச்சு. காதல் வந்துச்சுனா அதுகூடவே சேர்ந்து காதல் தோல்வியும் கண்டிப்பா வந்தே தீரும். அப்படி, "பிரேக் - அப்" ஆகி பிரிவில் வாடும் "சூப் கேர்ள்ஸ்" க்கும், டாஸ்மாக் தேடும் "சூப் பாய்ஸ்" க்கும் உங்கள் வருங்காலத்தை வளமாக்க சில டிப்ஸ்... ஜோடி பிரிஞ்சு போச்சுன்னு ஒரே இடத்துல உட்காந்து ஒப்பாரி வைக்காம, டிராவல் கிளம்புங்க. பயணம் ஒன்று தான் உங்களை புத்துயிர் பெற வைக்கும். டிராவல் முடிச்சுட்டு வந்த காலோட உங்களுக்கு புடிச்ச வேலையில சேர்ந்துருங்க. உங்க கவனம் முழுக்க வேலைல மட்டும்தான் இருக்கணும். அப்பப்போ, பிரிஞ்சுபோன ஜோடியோட நியாபகம் வரத்தான் செய்யும். அந்த மாதிரி நேரத்துல, புது நண்பர்களை உருவாக்கிக்கோங்க.. வீட்ல இருக்கும்போது புத்தகம், உடற்பயிற்சினு உங்கள பிஸியாவே வச்சுக்கோங்க. யார்கிட்டயாச்சும் பேசிக்கிட்டே இருங்க, அந்த உரையாடல் ஆரோக்கியமானதா இருந்தா இன்னும் நல்லது. இதெல்லாம் விட முக்கியமானது "நம்பிக்கை". எந்த நேரத்துலயும் நம்பிக்கையை மட்டும் விட்றாதீங்க...தனி ஆளா இந்த உலகத்தை சமாளிக்கப் போறோம்னு கெத்தோட இருங்க...ஏன்னா..சிங்கம் எப்பவுமே சிங்கிளாதான் வரும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close