பூச்சிகள் விளக்கை சுற்றி வருவது ஏன்?

  jerome   | Last Modified : 08 Jan, 2017 12:10 am

இரவு நேரங்களில் நமது வீட்டிலுள்ள விளக்குகளைச் சத்தமிட்டுக் கொண்டே பூச்சிகள் சுற்றிக்கொண்டிருக்கும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை விளக்கினை நிலவு எனத் தவறாக எண்ணுவதால் இவ்வாறு செய்கின்றன என்ற கருத்து அதிகமாக நிலவுகிறது. ஆண் பூச்சிகளைக் கவருவதற்காகப் பெண் பூச்சிகள் சில வெளிச்சத்தினை ஏற்படுத்தும் தன்மையுடையது. இந்த வெளிச்சத்தினை நினைத்துக் கொண்டு ஆண் பூச்சிகள் விளக்கினை நோக்கி செல்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் பெண் பூச்சிகளும் விளக்கினை சுற்றுகின்றன. இருட்டில் சந்தோஷத்துடன் பறந்து திரியும் பூச்சிகள் அதே இடத்தில் ஒரு பிரகாசமான ஒளி ஏற்படும்போது அதனை நோக்கி கவரப்படுகின்றன என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால் இதற்கான துல்லியமான காரணம் என்னவென்று, இது வரை யாருக்குமே தெரியவில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close