பேயை விரட்டணுமா? ஒரு சொம்பு தண்ணி போதும் பாஸ்..!

  நந்தினி   | Last Modified : 07 Jan, 2017 06:20 pm

வீட்டில் தொடர்ந்து யாருக்காவது சோர்வு, மன அழுத்தம், மன நோய் காணப்பட்டால் வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது; அதை நீக்க வேண்டும் என்று கூறி கோயில்களில் பூஜை, வீட்டில் யாகங்கள் நடத்துவது என்று பல பரிகாரங்கள் செய்வதுண்டு. இவற்றை எல்லாம் நீக்குவதற்குத்தான், இரவில், தலைக்கு அருகில் ஒரு டம்ளர் அல்லது செம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு நமது வீட்டுப் பெரியோர்கள் தூங்குவது உண்டு. இரவில் தாகம் எடுத்தால், குடிப்பதற்கு என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், உண்மையான காரணம் அது கிடையாது. இரவில் உலவும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவே அதுமாதிரி வைக்கப்படுகிறது. இரவில் தூங்கும்போது தலைக்கு அருகே ஒரு டம்ளரில் தண்ணீர் வைக்க வேண்டும். காலையில் அந்தத் தண்ணீரை வெளியே வீசி விட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது என்பதே இதன் உண்மையான காரணமாகும். அந்த தண்ணீரில் சிறு சிறு குமிழிகள் காணப்பட்டால், கெட்ட சக்தி நீக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். அப்படி இல்லையென்றால், கெட்ட சக்தி உங்களது வீட்டில் இல்லை என்று கருதப்படுகிறது. நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close