தக்காளிக்கு வயசு என்ன தெரியுமா?

  jerome   | Last Modified : 09 Jan, 2017 02:57 pm

தினம் நாம சாப்பிடற சாப்பாட்டுல தக்காளி இல்லாம இருந்ததே இல்ல. காய்கள்லயே ரொம்ப பாவமான காய் தக்காளி தான். ஏன்னா, அத ஈஸியா நசுக்கிருவோம்.. பாவம்.. அதுக்கு எவ்ளோ வலிக்கும்னு கூட நாம யோசிக்கிறது இல்ல.. அப்படிப்பட்ட அந்த அப்பாவி ஜீவனான தக்காளி 5 கோடி வருசத்துக்கு முன்னாடி இருந்தே இருக்காம். தென் அமெரிக்காவுல இருக்க பாட்டகோனியா பகுதியில ஒரு பழங்கால "தாத்தா" தக்காளியையும் கூடவே ஜோடியா ஒரு உருளைக்கிழங்கையும் கண்டுபுடிச்சு இருக்காங்க. ரெண்டுக்கும் என்ன வயசு இருக்கும்னு ஆராய்ச்சி செஞ்சப்போ 5 கோடியே 20 லட்சம்னு தெரிய வந்துருக்கு. இதுக்கு முன்னாடி 2 கோடி வயசுடைய ஒரு "அப்பா" தக்காளிய கண்டுபுடிச்சாங்க. இந்த தக்காளியோட குடும்ப பேரு "பெர்ரி". உண்மையில தக்காளி, "பழங்கள்" லிஸ்ட்டுல தான் வரணும். நாம தான் அத "காய்" லிஸ்ட்டுல சேர்த்துட்டோம். பாவம் தக்காளி, இந்த மேட்டர் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close