கர்ப்பிணிகளுக்கு 7-ஆம் மாதத்தில் வளைகாப்பு செய்வது ஏன்?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் தாயாக வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். இந்த இயற்கை, பெண்களுக்கு அளித்த வரம் அது. மனித குலம் தொடர்ச்சியாக விருத்தி அடைவதற்கு பெண் தான் முதல் வித்து. தன்னில் கருக்கொண்டு இந்த உலகத்தை வந்தடையப் போகும் புது உயிரை பேணி காப்பதில் கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருமே சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் நலத்திற்காகவும், சிசுவின் நன்மைக்காகவும் சம்பிராதயம் எனும் பெயரில் செய்யப்படும் மருத்துவம் தான் "வளை காப்பு". 1. 7-ஆவது மாதத்திற்குப் பிறகு கணவன்-மனைவி உடலுறவு கொண்டால், அது சிசுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மூளை வளர்ச்சியும் குறையும். ஆகவே, வளைகாப்பு செய்து தம்பதியை பிரிக்கின்றனர். 2. கர்ப்பிணி பெண்களுக்கு, பிரசவ காலத்தில் பயப்படாமல் இருக்க மன தைரியம் சொல்லத்தான், குழந்தை பெற்றவர்களை அழைத்து வளையல் மாட்டச் சொல்கிறார்கள். 3. கைகள் நிறைய வளையல் இடுவதால், அந்த ஓசையைக் கேட்டு கருவில் உள்ள குழந்தை துள்ளிக்குதித்து ஆனந்தமாக இருக்கும். 4.தாயும் சேயும் போதுமான ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக 7 விதமான சுவைமிக்க உணவுகள் கொடுக்கப் படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close