நகை போட்டா மட்டும் போதுமா..? அது ஏன்னு தெரிஞ்சுக்க வேணாமா..?

  jerome   | Last Modified : 11 Jan, 2017 05:33 pm
பெண்கள் எல்லாருக்குமே நகை போட்றதுனா ரொம்ப பிடிக்கும். அதுலயும், சில பெண்கள் ஃபேஷன்ற பேர்ல பிளாஸ்டிக்ல செஞ்ச நகைகள போட்டுகிறாங்க. அடிப்படையில பார்த்தா, நகைகள் எப்பவுமே உலோகத்துல தான் இருக்கணும். தங்கம், வெள்ளி, செம்பு, ஐம்பொன் போன்ற உலோகங்கள்ல உருவாகுற நகையை போடுறதால, உடம்பும் மனசும் ஆரோக்கியமா இருக்கும். நம்ம உடம்புல எந்தெந்த நரம்புகள் எங்கெங்க இருக்குனு தெரிஞ்சு, அதுக்கேத்த மாதிரி நகையை உருவாக்கி வச்சுருக்காங்க நம்ம முன்னோர்கள். இந்தியா பூமத்திய ரேகைக்கு பக்கத்துல இருக்கிறதால வெப்பம் அதிகமா இருக்கும். அதுல இருந்து நம்ம உடம்ப காப்பாத்தி குளிர்ச்சியா வச்சுக்கத் தான் தங்கத்துல நகை போட்டுக்கிறோம். கொலுசு: பெண்கள், ஆண்கள விட அதிகமா உணர்ச்சிவசப்படுவாங்க. அதனால, அவங்க குதிகால் பகுதியில தொடுற மாதிரி வெள்ளி கொலுசு போட்டுக்கணும். இதுனால, கால் பகுதியில இருந்து மூளைக்கு போற நரம்புகள் உணர்ச்சிகள கட்டுப்படுத்தும். சின்ன குழந்தைங்க கால்ல கொலுசு போடுறதுனால, அவங்க எங்க போறாங்க, வர்றாங்கன்னு ஈஸியா தெரிஞ்சுக்க முடியும். மெட்டி: கல்யாணமான பெண்கள் மட்டும்தான் மெட்டி போடணும், அதுவும் வெள்ளியில செஞ்சு தான் போடணும். ஒரு பக்கம், அது அவங்கள அடையாளம் காட்ட பயன்பட்டாலும், இன்னொரு பக்கம் அவங்களோட கருப்பை நீர் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துது. இதுக்கு காரணம், வெள்ளியில உள்ள ஒரு வித காந்த சக்தி, கால் விரல்கள்ல உள்ள நரம்பு மூலமா கருப்பையை கண்ட்ரோல் பண்ணுது. மோதிரம்: இடது கை மோதிர விரல்ல போட்டுக்கிற மோதிரத்தால நெறய நல்லது இருக்குங்க. நம்ம இதயத்தை வலுவாக்கவும் கூடவே ஆண், பெண் இருவரோட பாலுறுப்புகளை ஸ்த்திரப் படுத்தி, அதிகமான உணர்ச்சிகளை தூண்டிவிட உதவியாவும் இருக்குது. அதனால தான் கல்யாணம் பண்ணும்போது இடது கை விரல்ல மோதிரம் போட்டுக்கிறாங்க. சுண்டு விரல்ல மோதிரம் போட்டா இதயத்துக்கு ஆபத்துனும் சொல்றாங்க. ஸோ..அத அவாய்ட் பண்ணிடுங்க. மூக்குத்தி: பெண்களுக்கு ரொம்ப அழகான ஒரு நகைனா அது மூக்குத்தி தான். மூக்குத்திக்கும் மூளைக்கும் எக்கச்சக்க தொடர்பு இருக்கு. இள வயசு பொண்ணுகளுக்கு மூளைல சில தேவை இல்லாத வாயுக்கள் இருக்குமாம். அத சரி பண்றதுக்கும் மூளையோட செயல்பாட்டை அதிகப்படுத்தவும் தான் மூக்குத்தி குத்த சொல்றாங்க. பெண்கள் இடது பக்கம் தான் மூக்குத்தி குத்திக்கணுமாம். மூக்குத்தினால ஒரு பக்க தலைவலி, நரம்பு பிரச்சினை, கோபம் இதெல்லாம் சரி ஆயிடும். ப்ளீஸ், குத்திக்கோங்க.. கடையில விக்கிற டம்மி மூக்குத்தி வாங்கி ஓட்டிக்காதீங்க. தோடு: "காதோரம் லோலாக்கு கத சொல்லுதம்மா" என பாட்டு பாடுற அளவுக்கு அவ்ளோ அழகான ஒரு விஷயம் தான் தோடு. தோடு கத மட்டும் சொல்லல, கண் நல்லா தெரியறதுக்கு ரொம்பவே யூஸ் ஃபுல்லா இருக்குதாம். கல்லீரல், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வராம இருக்கவும் ஹெல்ப் பண்ணுதாம். வளையல்: நம்ம பிறந்ததுல இருந்தே உடம்புல ஹார்மோன் கொறஞ்சுகிட்டே இருக்குமாம். அத, கண்ட்ரோல் பண்ணதான் வளையல். வளையல் போட்டுகிறதால ஆஸ்த்மா, நுரையீரல் பிரச்சினைகள் சரி ஆகுதாம். கர்ப்பிணி பெண்களுக்கு "வளை காப்பு" நடத்துறதே தாயும் சேயும் நலமா இருக்கணும் தான். ஆக மொத்தத்துல, நகை போட்டுக்கிறது அழகான ஒரு மருத்துவம் தான். இவ்ளோ விஷயத்தையும் டெக்னாலஜி எதுமே இல்லாம கண்டுபுடிச்ச நம்ம "கிரேட் கிராண்ட்பாஸ் அண்ட் மாம்ஸ்" லாம் பெரிய ஜீனியஸ் தாங்க.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close