குழந்தைகளின் அழுகையை நிறுத்த வேண்டுமா..?

  jerome   | Last Modified : 12 Jan, 2017 12:07 pm
"குழல் இனிது யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேட்காதவர்", திக்கி திக்கித் தொடங்கும் குட்டிக் குழந்தைகளின் பேச்சைக் கேட்டாலே போதும், மனசுக்கு அவ்ளோ இதமா இருக்கும். ஆனால், அதே குட்டி தேவதைகள் அழும் போது, என்னாச்சோ? ஏதாச்சோ? -னு மனசு பதறி துடிக்கிற அந்த வேதனையை வார்த்தையால சொல்ல முடியாதுங்க. குழந்தை பிறந்து அவங்க பேச ஆரம்பிக்கிற வரைக்கும், பெத்தவங்களுக்கு கம்பி மேல நடக்குற போராட்டமா தான் இருக்கும். குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள் மற்றும் அதை நிறுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் சில டிப்ஸ் கொடுத்துள்ளனர். 1. பெரும்பாலான குழந்தைகள் பசியினால் தான் அழுகிறார்களாம். அதனால், சரியான நேரத்தில் அவர்களுக்கு உணவு கொடுத்துவிட வேண்டும். 2. குழந்தைகள் தனிமையை உணரும்போது பய உணர்வினால் அழ ஆரம்பித்து விடுவார்களாம். அதனால், முடிஞ்ச வரைக்கும் அவங்க கூடவே இருங்க. குழந்தையை தொட்டில்ல போட்டுட்டு டி.வி. யில சீரியல் பார்க்க போயிடாதீங்க. 3. சில சமயங்கள்ல அவங்களுக்கு "டைம் - பாஸ்" க்கு எதுவும் இல்லைனா அழுதுடுவாங்க. அதனால , எப்பவுமே விளையாட்டு பொருட்களை அவங்க பக்கத்துலயே வச்சுக்கோங்க. முடிஞ்சா, அவங்கள தூக்கிட்டு ரிலாக்ஸா ஒரு வாக்கிங் போயிட்டு வாங்க. 4. குழந்தை இருக்குற ரூமை ரொம்ப சூடாவும் இல்லாம, ரொம்ப குளிர்ச்சியாவும் இல்லாம பார்த்துக்கோங்க. அதுகூட, அவங்க அழ காரணமா இருக்கலாம். 5. இதெல்லாம் செஞ்சும் அவங்க தொடர்ந்து அழுதுட்டே இருந்தா, யோசிக்காம அடுத்த செகண்டே டாக்டர்ட்ட கூட்டிட்டு போயிடுங்க. செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டாலும் அழ ஆரம்பிச்சுடுவாங்க. ட்ரீட்மென்டுக்கு அப்புறம் சரி ஆயிடுவாங்க. 6. அவங்க அழும் போது, நீங்க டென்ஷன் ஆகி அவங்க மேல கோபப்படாதீங்க, அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா ஆறுதல் சொல்லி விளையாட்டு காட்டுங்க. சிரிக்க ஆரம்பிச்சுருவாங்க. வாழ்க்கையில திருப்பி கிடைக்காத, நாம அதிகமா நேசிக்கிற இந்த குழந்தை பருவத்தை, மறுபடியும் நமக்கு வாழ கொடுத்த நம்ம குழந்தைகள பத்திரமா பார்த்துக்குவோமே..!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close