உங்களுக்கு இந்த மாதிரி மனைவி கிடைச்சா என்ன பண்ணுவீங்க..?

  jerome   | Last Modified : 12 Jan, 2017 02:49 pm
பசங்க எல்லாருக்குமே கல்யாண வயச நெருங்கும் போது மனசுக்குள்ள லேசா பீதி கிளம்பத்தான் செய்யும். வரப்போற மனைவி "படையப்பா நீலாம்பரி" மாதிரி அமைஞ்சுட்டா, "நம்மள வச்சு செஞ்சுருவாளோ?" ன்ற பயம் தான் அது. இதே பயம் பொண்ணுங்களுக்கும் இருக்கும். நம்ம சமூகம் பொண்ணுனா இப்படி தான் இருக்கணும்னு ரூல்ஸ் போட்டு, அவங்கள அடக்கி வச்சுருது. அவங்க, அத மீறும் போது தப்பா தெரியுறாங்க. "பிடிவாதக்காரி" னு பேரு வாங்கிடுறாங்க. அடிப்படையில, பொண்ணுங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான மனநிலை தான் இருக்கும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. இந்த மாதிரி பிடிவாத குணமுடைய பெண், உங்களுக்கு மனைவியா கிடைச்சா அவங்கள எப்படி ஹேண்டில் பண்ணனும்னு நிபுணர்கள் ஐடியா கொடுத்திருக்காங்க. 1. பிடிவாத குணமுடைய பெண்களிடம் தான், நல்ல மனைவியா இருக்கிறதுக்கான தகுதிகள் அதிகம் இருக்குதாம். அவங்க எந்த அளவுக்கு ஒரு பொருள் வாங்குறதுக்கு அடம் புடிக்கிறாங்களோ, அதே அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்னு குறிக்கோள் இருக்குமாம். 2. அழுகை, கோபம், வெறுப்பு, சந்தோசம்னு எல்லாத்தையும் 100% முழுசா வெளிப்படுத்த தெரிஞ்ச இவங்களால அடுத்த செகண்டே எல்லாத்தையும் மறந்துட்டு சகஜாமாவும் பழக ஆரம்பிச்சுடுவாங்களாம். 3. சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி ரியாக்ட் பண்றதோட, கணவன்களுக்கும் ரொம்பவே சப்போர்ட்டா இருப்பாங்களாம். 4. வீடு, பொருட்கள், சேமிப்புனு இவங்க போடற பிளான் எல்லாமே பக்காவா இருக்குமாம். ஆக மொத்தத்துல, வாழ்க்கையை "செம்ம" யா வாழத்தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு இந்த சொஸைட்டி பிடிவாதக்காரிகள்னு தப்பா பேரு வச்சிருச்சு. இப்படிபட்ட பொண்ணு உங்களுக்கு மனைவியா கிடைச்சா அவங்களுக்கு சுதந்திரம் மட்டும் கொடுத்தா போதுமாம். உங்க வாழ்க்கையில துளி கவலை கூட இருக்காதுன்னு உளவியல் நிபுணர்கள் உறுதியா சொல்றாங்க.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close