சொந்தத்தில் குழந்தை பெற்றெடுக்காத சிம்பன்சி குரங்குகள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள் சாதாரணமாக உடல் உறவு கொள்ளும் போது தனது கூட்டத்தில் உள்ள சிம்பன்சிகளுடன் உறவு வைத்து கொள்கின்றன. அதே சமயம் தனக்கு குழந்தை வேண்டும் என்று எண்ணி உறவு வைத்துக் கொள்ளும் போது தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்வதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிம்பன்சிகள் எதற்காக இவ்வாறு செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டபோது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது, பிறக்ககூடிய குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதால் இவ்வாறு அவை செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சி தான்சானியாவில் உள்ள தேசிய பூங்காவில் சுமார் 150 சிம்பன்சிகளின் டிஎன்ஏ-வை வைத்து மேற்கொள்ளப்பட்டது என ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close