சீனப் பெருஞ்சுவர் தெரியும்... இந்திய பெருஞ்சுவர் தெரியுமா?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில் பழங்கால சுற்றுச்சுவர் ஒன்று அமைந்துள்ளது. கோரக்பூர் மற்றும் சோக்கிகர் இடையே அமைந்துள்ள இந்த சுவரானது 80 கி.மீ நீளம் கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் இதன் பலபாகங்கள் கண்டுபிடிக்க வேண்டி உள்ளதால் இந்த அளவு அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்டுகிறது. இருந்த போதும் கூட இந்த சுவரானது இந்தியாவிலே மிக நீளமான சுவராகவும், உலக அளவில் இரண்டாவது நீளமான சுவராகவும் கருதப் படுகிறது. இந்த சுவர் யாரால் எப்போது, எதற்காக கட்டப்பட்டது என்று இன்று வரை தெரியவில்லை. காரை மற்றும் சுண்ணாம்பு கலவை இன்றி வெறும் கற்களை மட்டும் அடுக்கி கட்டப்பட்ட இந்த சுவரானது பல காலம் கடந்தும் இன்னும் உறுதியாக உள்ளது. விந்திய மலைகள் ஊடாக பயணிக்கும் இந்த சுவரின் பாதையில் சிறு சிறு கோவில்கள், மண்டபங்கள், சிலைகள், ஏரிகள் போன்றவை அமைந்துள்ளன. இந்த சுற்றின் உள்பகுதியில் மேலே ஏறிச்செல்ல படிக்கட்டுகள், ஆயுதம் வைக்கும் இடங்கள் போன்றவை அமைக்கப் பட்டுள்ளதால் இது ஏதேனும் ஒரு நாட்டின் பாதுகாப்பு சுவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் தற்போது வரை எந்த ஒரு அரச முத்திரையோ அல்லது கல்வெட்டோ இந்த சுவர் குறித்து கிடைக்க வில்லை. புரியாத புதிராக உள்ள இந்த சுவரின் விடைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் பயணித்து கொண்டே இருக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close