தண்ணி காட்டி விருது வாங்கிய 9-ஆம் வகுப்பு மாணவன்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

1997-ஆம் ஆண்டு, Nathan Zohner (14) என்னும் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், தன் சக வகுப்பு மாணவர்களிடம் 'டைஹைட்ரஜன் மொனாக்சைடு' மனிதர்களை மூச்சுத் திணறவைக்கும், இரும்புப் பொருட்களை விரைவில் துருப்பிடிக்க வைக்கும் என்னும் உண்மைகளை விளக்கி, அதனைத் தடைசெய்யும்படி 50 பேரில் 43 பேரின் ஓட்டுக்களைப் பெற்றான். அவனது அந்த ஆய்வுக்காக, Greater Idaho Falls Science Fair நடத்திய போட்டியில் முதல் பரிசையும் பெற்றான். அவனது ஆய்வினைப் பார்த்து விட்டு வியந்த James K. Glassman என்னும் பத்திரிக்கையாளர், சிறுவனது பெயரை அடிப்படையாக வைத்து "Zohnerism" என்னும் வார்த்தையையும் உருவாக்கினார். அதன் அர்த்தம், "அறிவியல் உண்மைகளை அடிப்படையாக வைத்து, முட்டாள் மக்களை சுலபமாகத் தவறான முடிவுகளை எடுக்க வைக்க முடியும்" என்பதாகும். ஏனென்றால், 'டைஹைட்ரஜன் மொனாக்சைடு' என்பது நாம் குடிக்கும் வெறும் தண்ணீரின் வேதியியல் பெயர் மட்டுமே!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.