யார் இந்த Peta?

  mayuran   | Last Modified : 19 Jan, 2017 07:17 pm

அமெரிக்காவின் விர்ஜினியாவில் 1980 ஆம் ஆண்டு விலங்குகளின் உரிமைக்காக போராடும் அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. விலங்குகள் மீது எந்த மருத்துவ ஆய்வுகளும் செய்யக் கூடாது என்றும் மிருகங்களை மனிதர்கள் வதைக்க கூடாது என்றும் சில முக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. மேலும் விலங்குகளை உணவாக உட்கொள்ள கூடாது, அவற்றில் இருந்து செய்யப்படும் பொருட்களை பயன்படுத்த கூடாது என பீட்டா அமைப்பினர் கூறுகின்றனர். இவர்களின் பெரிய மூலதனமாக கருதப்படுவது செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களே. 37 வருடங்களில் 30 லட்சம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அதோடு லாப நோக்கம் இல்லாத அமைப்பகை இருந்தாலும், உலகெங்கிலும் இருந்து சுமார் வருடத்திற்கு 30 கோடி ரூபாயை நன்கொடையாக Peta பெறுகிறது. அமெரிக்க வீதிகளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நாய்களையும், பூனைகளையும் காப்பாற்றி அவைகளுக்கு இருப்பிடம் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், 15 நாட்களுக்குள் அவற்றை எடுத்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்றால், அந்த மிருகங்களை கருணைக் கொலை செய்வதாக Peta மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close