சிக்கன் 65-ஐ கண்டுபிடித்தது யார் தெரியுமா?

Last Modified : 01 Jan, 1970 05:30 am

அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் எப்போதுமே சிக்கன் 65-க்கு தனி இடம் உண்டு. அதிகம் விரும்பப்படும் அசைவ உணவான இதனை எங்கு, எப்போது, யார் கண்டு பிடித்தார்கள் தெரியுமா?. இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை நம் சிங்கார சென்னையில் தான் உள்ளது. அண்ணா சாலையில்(மவுண்ட் ரோடு) உள்ள புஹாரி ஹோட்டலில் அதன் உரிமையாளரான ஏ.எம் புஹாரியால் தான் முதல் முறையாக சிக்கன் 65 தயாரிக்கப் பட்டது. 1965-ம் ஆண்டு உருவாக்கப் பட்டதால் இதற்கு சிக்கன் 65 என பெயர் வைத்தனர். தொடர்ந்து சிக்கன் 78,82,80 என பல வந்த போதும் சிக்கன் 65 மட்டும் அனைவரின் விருப்ப தேர்வாக இன்றும் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close