துப்பட்டா அணிபவரா? தயவுசெய்து இதை படியுங்கள் !

  gobinath   | Last Modified : 20 Jan, 2017 03:32 pm
பெரும்பாலான இளம் பெண்கள் தங்கள் உயிரை பறி கொடுப்பதற்கு அவர்கள் அணிந்திருக்கும் துப்பட்டாக்களே காரணமாக அமைவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் கொண்ட நிறுவனங்களில் பணியாற்றும் பல இளம்பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை பற்றியோ அல்லது, சேலையின் முந்தானை பற்றியோ சிறிதும் கவனமின்றி செயல்படுவதால், பெரும்பாலான உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ அறிவியலுக்கான கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில், பெரும்பாலான இளம் பெண்கள் தங்களின் கவனக் குறைவு காரணமாகவும், துப்பட்டாக்களை சரியாக கவனிக்காமலும், சேலையின் முந்தானையை காற்றில் பறக்க விட்டபடி செல்வதாலும், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அதிகப்படியான விபத்துக்கள் நடப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தங்களின் மானம் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக துப்பட்டா பயன்படுத்தும் பெண்களே, உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நேரங்கள் ஒதுக்குங்கள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close