கிருமிகளின் சரணாலயம் ஆண்களின் தாடிகள்

  jerome   | Last Modified : 25 Jan, 2017 03:51 pm
இன்றைய நவ நாகரீகத்தில் கூட, பெரும்பாலான இளைஞர்கள் தாடி வளர்த்துக்கொண்டு "ஸ்டைல்" ஆக வலம் வருகின்றனர். காரணம், இந்த காலத்து யுவதிகள் தாடி வைத்திருக்கும் ஆண்களை அதிகம் விரும்புவதாக கூறுகின்றனர். இதே தாடியில் தான், கழிவறைகளில் காணப்படும் கிருமிகளும் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஆய்வு செய்த நுண்ணுயிரியல் வல்லுநர் ஜான் கோலோபிக் கூறுகையில், சில ஆண்களின் தாடியில் சாதாரண பாக்டீரியாக்களும், சிலரின் தாடியில் மலத்தில் காணப்படக்கூடிய பாக்டீரியாக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தாடியை அடிக்கடி கைகளால் தடவும் பழக்கம் இருந்தால், கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close