சரியாகத் தான் பர்ஃபியூம் போடுகிறீர்களா??

  shriram   | Last Modified : 25 Jan, 2017 08:26 pm
யாரவது நம்மள தாண்டி போகும்போது, "அதெப்படி?, நம்மளும் தான் சென்ட் அடிக்கிறோம். ஆனா, இவங்க பக்கத்துல மட்டும் நாள் முழுக்க நல்ல மணம் வீசுது,"ன்னு தோணுனது உண்டா? அதுக்கெல்லாம் சில ட்ரிக்ஸ் இருக்குது பா... *முதலில், நீங்கள் நல்ல ஸ்ட்ராங்கான மணம் இருக்க வேண்டும் என நினைப்பவராக இருந்தால், பாடி ஸ்ப்ரே மற்றும் டியோடரண்ட்டை தவிர்த்து பர்ஃபியூமை உபயோகப்படுத்துங்கள். அதுதான் அதிக மணம் தரும். கொஞ்சம் கஸ்டலியும் கூட. *இதுல பொதுவா எல்லாரும் செய்யுற தவறு, பாட்டிலை பக்கத்துல வச்சு அடிக்குறது... 15-20 செ.மீ தள்ளி வச்சு அடிச்சாதான், நெறய இடத்துல படும். *முக்கியமா இந்த பர்ஃபியூம, சில இடங்கள்ல போட்டுக்கிட்டா அதன் எபெக்ட் கூடுதலா இருக்கும். ரத்த ஓட்டம் அதிகமா இருக்குற, நாளங்கள் தெரியும் பகுதியில் அடிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், கையில் மணிக்கட்டை மற்றும் முழங்கை அருகே கை மடங்கும் இடுக்கில், காதுகளுக்கு பின்னால், கழுத்துப்பகுதி போன்ற இடங்களில் பர்ஃபியூமின் தாக்கம் நன்கு தெரியும். *மேல சொன்ன எல்லா இடத்துலயும் அள்ளி பூசக்கூடாது... ஏதாவது ஒன்றிரண்டு இடத்துல மட்டும் ஒரு முறை ஸ்ப்ரே பண்ணா போதும். இல்லைனா, நீங்க போற இடத்துல எல்லாரையும் வெறுப்பேத்துற மாதிரி நெடி அதிகமா இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close