அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவர் ஆனார். அன்றுமுதல் தன்னுடைய இறப்பு வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஹிட்லர் ஜெர்மனியின் பியூரர் என்றும் அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினின் ஹிட்லரின் நாசிக் படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close