குழந்தை கடத்தலுக்கு முக்கிய காரணம் பெற்றோர்களே..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நெறிமுறைப்படுத்தப்பட்ட செயல்திட்டம் உருவாக்கி இருக்கும் ஃபிஸிக்ஸ் நிறுவனத்தின் திட்ட குழுத்தலைவர் பாரதி, "குழந்தைக் கடத்தலுக்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். முன்பின் தெரியாதவர்களைவிட குழந்தைக்கு நன்கு பரிட்சயப்பட்டவர்களாலேயே குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுகிறார்கள்" என அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் அறிவுரைகள் வழங்கி உள்ளார். * வீட்டில் வேலை செய்யும் டிரைவர், பணியாட்கள் முன்பு சொத்து விவரங்களைப் பற்றி பேச வேண்டாம். அதுவே, அவர்களின் பணத்தாசையை தூண்டி விடுவதற்கு ஏதுவாக அமைந்து விடும். * குழந்தைகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மூன்றாம் நபர்களிடம் பழகும் விதங்களை பற்றி அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். * குழந்தைகளின் தேவைக்கு அதிகமான பணத்தை பாக்கெட் மணியாக பள்ளிக்குக் கொடுத்தனுப்ப வேண்டாம். குழந்தைகளுக்கு வீட்டு முகவரி, குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்களை எவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித்தர முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித்தர வேண்டும். * குழந்தைகள் நலனில் பெற்றவர்களுக்கு தேவைப்படும் அதே அக்கறை, பள்ளி நிர்வாகத்திற்கும் அவசியம் இருக்க வேண்டும். *இயற்கை சீற்றம், தவிர்க்க முடியாத அசம்பாவிதங்கள் நடக்கும் சூழல்களில் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதுடன், அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரை பாதுகாப்பாக நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close