பொதுவுடைமை கல்விக்கு வித்திட்ட மெக்காலே பரிந்துரை

Last Modified : 02 Feb, 2017 04:03 pm
ஜாதிய பிடியில் இருந்த இந்திய கல்வி முறையை பொதுவுமடையாக்க வித்தாக அமைந்த, மெக்காலே கல்விக் கொள்கை பரிந்துரை செய்யப் பட்ட தினம் இன்று. ஆங்கிலேயர் காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது குருகுல கல்வி முறையில் உயர்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கிழக்கிந்திய கம்பெனி அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக தாய் வழி கல்வி முறை மற்றும் ஆங்கில வழி கல்வி முறை என இரு முறைகளை கல்வியாளர்கள் பரிந்துரை செய்தனர். அதில் ஆங்கில வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த பிப்ரவரி 2-ம் தேதி 1835-ம் ஆண்டு தாமஸ் பேபிங்டன் மெக்காலே பரிந்துரை வழங்கினார். இவ்வாறாக இந்தியாவில் அனைவரும் கல்வி கற்க மெக்காலே கல்வி கொள்கை அடிப்படையாக அமைந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close