வயதில் மூத்த பெண்கள் மேல் காதல் உண்டாவது ஏன்?

  jerome   | Last Modified : 03 Feb, 2017 12:38 pm
கருவாடு தின்னாத பூனையை பார்க்க முடியாது. அதே போல ராமனாய் வாழும் ஆணையும் பார்க்க முடியாது. 'அந்த' விஷயத்துல எல்லா ஆண்களுமே கொஞ்சம் வீக் தான். இந்த லிஸ்ட்ல புதுசா ஒரு விஷயம் சேர்ந்துருக்கு. நமக்குத் தெரிந்த பல பிரபலங்கள் அவர்களை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துள்ளனர். இது ஒண்ணும் பெரிய தப்பு கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு, நம்ம சமூகம் ரொம்ப ஆரோக்கியமான (அப்படியா!) வளர்ச்சி அடைஞ்சுருக்கு. இப்படி நடக்கிறதுக்கு காரணம் என்னனு யோசிச்சப்போ சில விஷயங்கள் தெரிய வந்துருக்கு.. * ஆண்களுக்கு தங்களை விட வயதில் மூத்த பெண்கள் மீது ஆசை அல்லது மோகம் ஏற்பட அழகு தான் முக்கிய காரணமாக இருக்குதாம். * தொணதொணன்னு பேசாம, அளவோட தெளிவா பேசுற பக்குவம் வயது மூத்த பெண்கள்ட்ட இருக்கிறதால நிம்மதியா ஃபீல் பண்றாங்களாம். * கல்யாணம் பண்ணப்போற பொண்ணு நம்மள விட மூத்தவங்களா இருந்தா குடும்பத்த பொறுப்பா பார்த்துப்பாங்கனு ஒரு எண்ணம் கூட இதற்கு காரணமா இருக்காம். * அதுமட்டுமில்லாம, ஆண்கள் செய்யும் சின்னச்சின்ன தவறுகளை ஊதி, ஊதி பெருசாக்க மாட்டாங்கன்னு ஆண்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்களாம். ( பின் குறிப்பு - எல்லா பெண்களுக்கும் இது பொருந்துமான்னு தெரியவில்லை. ஏன்னா, ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் மச்சி)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close