கீரைப் பிரியரா நீங்கள்...? உங்களுக்கான டிப்ஸ்...!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அசைவப்பிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில், கீரை பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. இந்த காரணத்தினாலேயே பல அரிய கீரை வகைகள் அழிந்துவிட்டன. எது எப்படி போனாலும், கீரை சாப்பிடும் இயற்கை உணவு விரும்பிகளுக்கு, எந்தக் கீரையை எப்போது சாப்பிட வேண்டும் என்ற சில டிப்ஸ்கள் கீழே... வெந்தயக் கீரை, பசலைக் கீரை, வல்லாரைக் கீரை, அகத்திக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, சக்ரவர்த்தி கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் உடல் சூடு குறையும். ஆகவே இவற்றை கோடைகாலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சுக்கான்கீரை, முசுமுசுக்கை, தூதுவளை, அரைக்கீரை, புதினா, கற்பூரவள்ளி போன்ற கீரைகளை மழை மற்றும் பனிக்காலங்களில் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கீரைகள் செரிமானம் ஆவதற்கு பல மணி நேரம் எடுக்கும் என்பதால், இரவு நேரத்தில் கீரை வகைகளை உணவில் சேர்க்கக் கூடாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close