காகங்கள் இல்லாத தமிழக கிராமங்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பறவைகளிலேயே மிக அறிவுள்ள பறவை காகம் தான். நகர்ப் புறங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் கார்ப்பரேஷனை விட காகத்திற்கு பொறுப்பு அதிகம். ஆனால், தமிழகத்தில் உள்ள சில மலைக் கிராமங்களில் காகங்கள் எதுவும் இல்லையென பறவை ஆர்வலர் கண்ணன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் தேவனப்பட்டி மலைக்கிராமங்கள் மற்றும் பண்ணைக்காடு, சின்னூர், பெரியூர், ராசிமலை, பூலத்தூர் ஆகிய மலை கிராமங்களில் காகங்கள் பறப்பதில்லை. இதற்கு, அங்கு நிலவும் அதிக குளிரே காரணமாம். இந்த தட்பவெப்ப நிலையில் காகங்களால் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடியாதாம். காகங்கள் இல்லாத இத்தகைய பகுதிகளை "கருங்குறிஞ்சி நாடு" என்று அப்பகுதியில் வாழ்பவர்கள் அழைக்கின்றனராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close