• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

பன்மொழி ஆய்வாளர் தேவநேய பாவாணர் பிறந்த தினம்

  mayuran   | Last Modified : 07 Feb, 2017 01:15 pm

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கூறினார் உலக ஆசான் திருவள்ளுவர். தமிழரின் மானத்தையும் அறிவையும் மீட்டெடுத்த பெருமை பன்மொழி ஆய்வாளர் தேவநேய பாவாணர் அவர்களையே சாரும். இவர் பிப்ரவரி 7 1902 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். ஆரியரும் திராவிடரும் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று எள்ளி நகையாடிய காலத்தில், தமிழே உலகின் மூத்த மொழி என்றும், அதுவே ஆரிய திராவிட மொழிகளுக்கு தாய் மொழி என்பதை நிரூபிக்க முற்பட்டார். அந்தவகையில் 1956 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித் துறையில் ஐந்தாண்டு ஆய்வு மேற்கொண்டு தமிழே உலகின் மூத்த மொழி என்பதை உலகறிய வைத்தவர் பாவாணர். தமிழ்த்தேசியத் தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். மதுரையில் 5.1.1981 அன்று நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று இரவே உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயில் இருந்து மீளமுடியாத அவர் 1981 ஜனவரி 16 ஆம் தேதி இயற்கை எய்தினார். தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.