வரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் இயற்கை ஆர்வலர் காலு டாங்கர். குப்பைகளை சேகரிக்க கையில் ஒரு பெரிய சாக்குப்பையோடு தினமும் காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார். மக்கள் அதிகம் கூடும் மூன்று சதுர கிலோமீட்டர் கடற்கரை பரப்பளவை, தினமும் சுத்தம் செய்கிறார். சுத்தம் செய்த பிறகு, வரும் பார்வையாளர் களுக்காக 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்புவார்.