தங்கத்தினை பராமரிப்பது எப்படி?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், மக்கள் நகைக்கடைகளை விடுவதாக இல்லை. சுபகாரியம் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்கிச் செல்கின்றனர். தற்போதுள்ள விலைவாசிக்கு நகை வாங்குவதே பெரும் பாடாக இருக்கும் நிலையில், அதனை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக நகைகள் வாங்கும் போது பளபளவென ஜொலிக்கும், ஆனால் 24 கேரட் தங்கமாக இருந்தாலும் சில நாட்களிலேயே பொலிவிழந்துவிடும். இதற்கு காரணம் நாம் சரியான முறையில் நகைகளை பராமரிப்பதில்லை. தங்கம், வெள்ளி நகைகளை பராமரிக்கும் சில எளிய விதிமுறைகளை காணலாம். 1. ஓரிரு முறை தங்க நகையை அணிந்து, கழற்றி வைக்கும் போது சோப்பு நுரை அல்லது ஷாம்பூ நுரையில் போட்டு கழுவி, காட்டன் துணியால் துடைத்து பத்திரப்படுத்த வேண்டும். மேலும், வெகு நாட்களாக நகையை அணியாமல் பெட்டியில் பூட்டி வைத்திருந்தால் செந்நிறமாக மாறிவிடும். அப்போதும் சோப்பு நுரையில் போட்டு எடுக்க வேண்டும். 2. விசேஷ தினங்களில் மட்டும் உபயோகிக்கும் பெரிய நகைகளை அதற்கென கொடுக்கப்பட்ட பெட்டிகளில் தனி தனியாக வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று உரசினால் தங்கம் தேய வாய்ப்புள்ளது. நகைப் பெட்டிக்குள் நகையை வைக்கும் போது சரியான முறையில் வைக்க வேண்டும் சங்கிலி, ஆராம், போன்றவைகள் மடங்கும்படி வைத்தால் விரைவில் விட்டுப்போகும். 3. தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்றவை அதிக பயன்பாட்டால் மங்கிப்போகும். அப்போது ஷாம்பூ நுரை அல்லது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு எடுத்தால் புத்தம் புது நகைபோல் ஜொலிக்கும். குறைவாக பயன்படுத்தும் நகைகளை பெட்டியில் வைக்கும் போது துணியில் சுற்றி வைத்தால் நிறம் மங்காமல் இருக்கும். 4. கற்கள் பதித்த நகைகள் பார்க்க பளபளப்பாக இருந்தாலும் விரைவில் கற்கள் மங்கிவிடும், கற்கள் பதித்த நகைகள் மீது நீல நிற பற்பசையை பூசி, பனியன் துணியினால் மெதுவாக தேக்க வேண்டும். நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால் நகை கற்களில் பதிந்துள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி கற்கள் மின்னும். 5. வெள்ளி கொலுசுகள் விரைவில் கறுத்துவிடும் அதனை தவிர்க்க வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல் மர பீரோவில் வைத்தால் பளபளவென இருக்கும். மேலும், பற்பசை பயன்படுத்தி வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யலாம். அல்லது டிடர்ஜன்ட் பொடியை மிதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து, ஊற வைத்து சுத்தம் செய்தால் நகைகள் பளபளப்பாகும். மேலும், வெள்ளி பொருட்களில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் கறுப்பாகாமல் இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close