ஸ்மார்ட் போன் மூலம் பழங்களை X-Ray செய்து வாங்குங்கள் ..

  shriram   | Last Modified : 10 Feb, 2017 02:04 pm
இந்தத் தலைமுறை மக்கள் அதிகம் பாவம் பண்ணியிருக்காங்களா? இல்ல பரிதாபத்துக்கு ஆளாகி இருக்காங்களான்னு தெரியல!! எல்லாமே கணினி மயம், எதை எடுத்தாலும் கலப்படம், ரசாயன மாற்றம் இப்படியே போன என்ன தான் ஆகும் இந்த உலகம்...? சாப்பிடுற உணவுல பிரச்சனை !! நம்ம சாப்பிடுறது நல்ல உணவு தானா? அதுக்குள்ள என்ன இருக்குனு பார்த்தா எப்படி இருக்கும்!! இப்படியெல்லாம் யோசிச்சப்போ, நம்ம கண்ணுமுன்னால பழங்களுக்குள்ள என்ன இருக்குனு காட்ட புதுசா ஒரு ஆப்-ஐ கண்டுபுடிச்சி இருக்காங்க. "ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன்" நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் உருவாக்கி உள்ள 'HawkSpex mobile' ஆப்-ஐ உங்க ஸ்மார்ட் போன்ல இன்ஸ்டால் பண்ணி நீங்க வாங்கும் பழங்களுக்குள்ள ஏதேனும் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை நேரடியாக பார்க்க முடியும். எடுத்துக் காட்டாக ஆப்பிள் பழம் ஒன்றை ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் HawkSpex App - ஐ ஸ்மார்ட்போனில் ஓப்பன் செய்து பழத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்டதும் ஆப்பிள் பழத்தில் இருக்கும் பூச்சிக் கொல்லி எச்சங்கள் மற்றும் அதன் உறுப்புக்கள் ஸ்மார்ட்போன் திரையில் தெரியும். சந்தையில் ஏற்கனவே பல்வேறு ஸ்கேனிங் சாதனங்கள் இருந்தாலும், அவற்றில் கூடுதலாக பிரிசம்(Prism) ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இதில் ஸ்மார்ட் போன் கேமரா மட்டுமே போதுமானது. இத்தகைய Appஐ பயன்படுத்தி நல்ல தரமான உணவுகளை சாப்பிடலாம். மேலும் இது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close