• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

'காந்தி கணக்கு' எப்படி வந்தது...?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாம் பொதுவாகவே ஒருவரிடம் தந்த காசு திரும்ப வராத நிலையில் அதனை 'காந்தி கணக்கு' என்று சொல்லுவோம். கிட்டதட்ட ‘நாமம்’ என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் 'காந்தி கணக்கு' என்பதற்கு சொல்லப்படும் உண்மை காரணங்களை பார்ப்போம். (1) மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள், ஆனால் அவர்களால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் தொண்டர்கள் அவர்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், பணம் தர வேண்டியதில்லை. அவ்வாறு அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, ‘காந்தி கணக்கு’ என்று சொன்னால் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு கதையும் பரவலாக பேசப்படுகிறது. (2) 1912ம் ஆண்டு வ.உ.சி.அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் வியாபாரத்தில் களம் இறங்கினார். அதற்காக சொந்த கப்பல் வாங்குவதற்கு நிதி திரட்டினார். இதனையறிந்த தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழ் மக்கள் நிதி திரட்டி ஐயாயிரம் ரூபாய் வசூலித்து அதை காந்தியிடம் கொடுத்து வ.உ.சி.யிடம் ஒப்படைக்கும்படி கூறினர். அந்தப் பணத்தை காந்தி கொடுக்கவில்லை. பலமுறை காந்தியை நேரில் சந்தித்து வ.உ.சி கேட்டப்போதும் அவர் அதை தரவில்லை. பின்னர் 8 ஆண்டுகள் கழித்து திலகரின் தலையீட்டால் 1920ம் ஆண்டு வ.உ.சி.யின் கைக்கு இந்த பணம் வந்து சேர்ந்தது. இவ்வாறாக காந்தியின் கைக்கு சென்றால் பணம் திரும்ப கிடைக்காது என்பதே 'காந்தி கணக்கு' என்றும் சொல்லப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.