46 ஆண்டுகளாக குழந்தையை கருவிலேயே வைத்திருந்த தாய்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்த இயற்கை பெண்களுக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய வரம் தாய்மை அடைவது தான். பல லட்சம் கோடி ஆண்டுகள் ஆகியும் இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டிருப்பதற்கு மனித குலம் விருத்தி அடைவதே முழுமுதற் காரணம். கருத்தரித்த நாள் தொட்டு, பிரசவ காலம் வரையிலும், கருவில் வளரும் சிசுவைப்பற்றிய ஒரு தாயின் கனவுகளையும், ஆசைகளையும் அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. ஆனால், 1955 - ஆம் ஆண்டிலிருந்து 46 ஆண்டுகளாக தன் குழந்தையை கருவிலேயே ஒரு தாய் சுமந்திருக்கின்றாள். மொராக்கோவைச் சேர்ந்த சாரா அபுதாலிப் என்ற பெண் தன்னுடைய 26 -ஆம் வயதில் கர்ப்பமாகி இருந்துள்ளார். எல்லாப் பெண்களையும் போலவே இவருக்கும் 10 - ஆவது மாதத்தில் பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் "சிஷேரியன்" மூலமே குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்று கூறி விட்டனர். சாரா அனுமதிக்கப்பட்ட அதே நேரத்தில், இன்னொரு பெண்ணுக்கும் "சிஷேரியன்" மூலம் குழந்தை பிறந்திருக்கின்றது. ஆனால், அந்தப் பெண் இறந்து விட்டார். இதனால், பயமடைந்த சாரா, மருத்துமனையில் இருந்து "சிஷேரியன்" வேண்டாம் என்று வந்து விட்டார். அடுத்த 2 நாட்களுக்கு பிரசவ வலியில் துடித்த சாரா, அதன் பிறகு வலியை உணரவில்லை. மொராக்கோவில் உள்ள சில நாடோடிக் கதைகளில் பிரசவ வலி இல்லையென்றால், கருவில் உள்ள குழந்தை நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதாக அர்த்தம் என சொல்லப் பட்டிருப்பதால், சாரா அதை முழுமையாக நம்பிவிட்டார். அதன் பிறகு, 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து பேரன், பேத்திகளையும் பார்த்து விட்டார் சாரா. இந்நிலையில் தான், சாராவிற்கு 46 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது உள்ள நவீன தொழில்நுட்பம் கொண்டு சிகிச்சை செய்ததில் கருவில் இருந்த குழந்தை முழுவதுமாக இறுகிப் போய் கல்லாக இருந்துள்ளது. இதை மருத்துவர்கள் STONE BABY ( Lithopedion) என்று அழைக்கின்றனர். இப்போது, சாரா நலமாக உள்ளார். இதேபோல, சீனாவில் 60 - வருடங்களாக ஒரு பெண் தன் குழந்தையை கருவில் சுமந்த சம்பவமும் நடந்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.