துப்பாக்கி இல்லாமல் விண்வெளிக்கு போகமுடியாது தெரியுமா??

  shriram   | Last Modified : 10 Feb, 2017 08:57 pm
விண்வெளியில் மிகவும் ஆபத்தான பொருட்கள் என்கிற பட்டியலில் முதலிடத்தில் துப்பாக்கி நிச்சயம் உண்டு. ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் எப்போதுமே ஒரு துப்பாக்கி இருக்கும் தெரியுமா? பல வருடங்களுக்கு முன்னால், விண்வெளியில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், வீரர்கள் உபயோகப்படுத்தும் அவசரகால உதவி பொருட்கள் என்னென்ன, என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டனர். அதில் மருத்துவ பொருட்கள், மாத்திரைகள், டார்ச் லைட் போல் துப்பாக்கியையும், பெரிய அரிவாள் ஒன்றையும் சேர்த்தனர். குறிப்பாக 3 விதமான துப்பாக்கிகளை இணைத்து ஒரு அரியவகை துப்பாக்கியை இதற்காக வடிவமைத்தனர். விண்வெளியில் இருந்து திரும்போது ஏதாவது தவறோ, அசம்பாவிதமோ ஏற்பட்டு விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானால், வீரர்கள் பாராஷூட் பயன்படுத்தி தரையிறங்க முயல்வார்கள். அப்போது இடம் மாறி காட்டுப்பகுதியில் வீரர்கள் தரையிறங்கி விட்டால், மிருகங்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்களுக்கு துப்பாக்கியும் அரிவாளும் தேவைப்படுமாம். மற்ற நாடுகள் இதை பின்பற்றாவிட்டாலும், ரஷ்ய நாட்டு விண்வெளி வீரர்களுக்கு இது கட்டாயம். தற்போது பழைய 3 வகை துப்பாக்கிக்கு குண்டு கிடைக்காததால், புதிய வகை கைதுப்பாக்கியை கொடுத்து அதற்கான தனி பயிற்சியையும் அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் அளிக்கிறது ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். தவறாக எதிரி நாட்டுக்குள் நுழைந்து விட்டாலும் இது உதவுமாம்!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close