அடேய்... லவ் ஜோடிகளே.. இத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க...!

  jerome   | Last Modified : 11 Feb, 2017 11:05 am

வரப்போற செவ்வாய்க்கிழமை "காதலர் தினம்" வருது. இத்தனை நாள் சிங்கிளா சுத்திகிட்டு திரிஞ்ச பலருக்கு, இந்நேரம் ஜோடி கிடைச்சுருக்கலாம். இல்ல, ஜோடி கிடைக்காம இந்த வருசமும் "பல்லு இருக்கிறவன்தான் பக்கோடா சாப்பிட முடியும்" னு மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசி, கூட இருக்கவங்க கிட்ட "பல்பு" வாங்கிருக்கலாம். எது எப்படியோ...! பிப்ரவரி - 14 வந்துட்டாலே, மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுடும். இந்த காதலர் தினம் எப்படி வந்துச்சு..? எங்க ஆரம்பிச்சதுனு..? உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தையே, திரும்ப சொல்லி "போர்" அடிக்கப் போறதில்ல...தெரியாத விஷயம் என்ன? என்ன ? இருக்குனு பார்ப்போம்.. 1. விக்டோரியா மஹாராணி காலத்துல, காதலர் தினம் அன்னைக்கு நம்ம ஆளுக்கு கொடுக்கிற "கிரீட்டிங் கார்ட்" ல கையெழுத்து போட்டு கொடுத்தா, அது அபசகுணமா நெனச்சாங்களாம். (அடி வாங்காம இருக்க..செம்ம டெக்னிக் யூஸ் பண்ணிருக்கானுங்க) 2. ரீசன்ட்டாக எடுத்த சர்வே கணக்குப்படி, வீட்டுல செல்லப் பிராணி வளர்க்குற 3% பிராணிப் பிரியர்கள், அவங்களோட நாய், பூனைக்கு கிரீட்டிங் கார்ட் வாங்கி கொடுக்கிறாங்களாம். 3. வருஷந்தோறும் 100 கோடி காதலர்கள் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கிறாங்களாம். (இதே வேலையா தான் இருப்பானுங்களோ..! ) 4. ஜோடி கிடைக்காம உட்காந்துருக்க சிங்கிள்ஸ் லாம் கவலைப்படாம இருக்கிறதுக்காக பிப்ரவரி - 14 அன்னைக்கே Single Awarness Day கொண்டாடப் படுதாம். ( வெரி.... SAD day.. கடுப்பேத்துறார் மை லார்ட் ) 5. 1537 -ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் 7 - ஆம் ஹென்றி, காதலர் தினத்தை விடுமுறை நாளாக அறிவிச்சாராம். ( இவன்தான்யா மனுஷன்..! ) 6. 1800 ஆம் வருஷம் காதலர் தினம் அன்று தான், CADBURY சாக்லேட் நிறுவனம் முதன் முதலாக சாக்லேட்டை பாக்ஸ்ல அடைச்சு விக்க ஆரம்பிச்சாங்களாம். 7. லவ்வர்ஸ் டேக்கு ரோஸ் குடுக்கிறதுல 73% ஆண்கள் தானாம். பொண்ணுங்க 27% தானாம். 8. பிப்ரவரி 14, இந்த ஒரு நாளைக்கு மட்டும் அமெரிக்காவுல 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாக்லேட் விற்பனை ஆகுமாம். 9. கிஃப்ட் கொடுக்கிறதுல பொண்ணுங்க தான் டாப். 85% பொண்ணுங்க அவங்க ஜோடிக்காக கிஃப்ட் வாங்குறாங்களாம். ( ஏன்னா.. நம்ம பசங்க கூழ் குடிக்க மட்டும் தான் வருவாங்க..! ) 10. ஒவ்வொரு வருஷமும் ஷேக்ஸ்பியர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரமான ஜூலியட்டிற்கு, பிப் - 14 அன்று (to juliet, italy ) என்ற முகவரிக்கு 1000 கடிதம் வருதாம். இப்ப படிச்ச விஷயத்தை, உங்க ஜோடி கூட ஷேர் பண்ணி இந்த காதலர் தினத்தை "காதலோடு" கொண்டாடுங்க.. HighQ - வின் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்...!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.