உங்க வண்டிக்கு பெட்ரோல் போடப் போறீங்களா.. ப்ளீஸ் ரீட் திஸ் ..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சாப்பாடு, டிரெஸ், வீடு இந்த அத்தியாவசிய தேவைகள் லிஸ்ட்ல.. இப்ப பைக்கும், காரும் வந்துடுச்சு. லட்சம், கோடின்னு செலவு பண்ணி வாங்குற நம்ம வாகனங்களை பாதுகாக்கிறதுல, நம்ம எல்லாருமே அதிக கவனமாத்தான் இருப்போம். இருந்தாலும், பெட்ரோல் ஃபில் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்கள் கவனிக்கணும்னு "மோட்டார் எக்ஸ்பெர்ட்ஸ்" சில பேரு டிப்ஸ் கொடுக்கிறாங்க..கேளுங்க.. 1. பெட்ரோல் பங்க்ல இருக்கிற, மொத்த பெட்ரோல் சேமிப்புத் தொட்டியும் நிலத்துக்கு அடியில தான் இருக்கும். அதனால் ஏற்படும் குளிர்ச்சியினால் எரிபொருளின் அடர்த்தி அதிகமா இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். 2. உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். 3. நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும். பெட்ரோல் போடுறீங்களோ இல்லையோ.. மறக்காம ஹெல்மெட்டும், சீட் பெல்ட்டும் போடுங்க..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close