இந்திய டிரைவிங் லைசென்ஸும் - வெளிநாடுகளும் !!

  shriram   | Last Modified : 13 Feb, 2017 12:34 pm

வண்டி ஓட்டுற எல்லார்கிட்டயும் 'டிரைவிங் லைசென்ஸ்' என்பது மிகவும் அவசியமான ஒன்று. குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பயணம் போகும் போது அங்க ஊர சுத்திப்பார்க்க வாகனத்தை வாடகைக்கு எடுக்காம சொந்தமா ஓட்டுனா எப்படி இருக்கும்!! சூப்பரா இருக்கும்ல..! ஆனா அப்படி நம்மளால முடியுமா? முடியும்.. நம் இந்திய டிரைவிங் லைசென்ஸை கொண்டு வெளிநாடுகளில் வாகனங்களை ஓட்ட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தகவலை பெற தொடர்ந்து படியுங்கள். 1. அமெரிக்கா: வாழ்நாளில் ஒரு முறையாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து, அங்க நீங்களே சொந்தமா வாகனம் ஓட்டணுமா ? ரொம்ப சிம்பிள்.. அதுக்கு உங்க லைசென்ஸ் இங்கிலீஷ்-ல இருக்கணும். அப்படி இல்லாம லோக்கல் மொழியில் இருந்தாலும் பிரச்னை இல்ல உங்க லைசென்ஸ் கூட IDP ( international Driving permit ) இருந்தா போதும். நீங்க அமெரிக்கால ஒரு வருஷத்துக்கு சுதந்திரமா வண்டியில சுத்தலாம்... 2. ஜெர்மனி: இங்க நீங்க இந்திய டிரைவிங் லைசென்சை வைத்து 6 மாசம் வாகனம் ஓட்டலாம். ஆனால் 'எம்பசி'யிடம் இருந்து மொழி மாற்று செய்யப்பட்ட லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். அதோடு IDP இருந்தால் கூடுதல் சிறப்பு. 3. பிரிட்டன்: இந்திய லைசென்ஸை வைத்து ஒரு வருஷத்துக்கு நீங்க எங்க வேணும்னாலும் போகலாம். 4. பிரான்ஸ்: இங்கு நீங்க ஒரு வருஷத்துக்கு எங்க வேணும்னாலும் வாகனம் ஓட்டலாம் ஆனால் பிரெஞ்சில் மொழி மாற்று செய்யப்பட்ட லைசென்ஸ் அவசியம். 5. ஆஸ்திரேலியா: இயற்கை அழகை கொண்ட ஒரு கண்டம் ஆஸ்திரேலியா. இந்திய லைசென்சை வைத்து 3 மாதம் வாகனம் ஓட்டலாம். உங்க லைசென்ஸ் இங்கிலீஷ்-ல் இருப்பது அவசியம் மேலும், IDP இங்கு கட்டாயம். 6. ஸ்விட்சர்லாந்து: எல்லோருடைய கனவு உலகம் ஸ்விட்சர்லாந்து!! ஆல்ப்ஸ் மலை, அழகிய சாலைகள் ரம்யமான இடம், இவைகளை ரசித்துக்கொண்டே ஒரு ஆண்டு வரை வாகனம் ஓட்டி நிறைவு பெறலாம். அதுக்கு நம்ம ஊர் 'டிரைவிங் லைசென்ஸ்' மட்டுமே போதுமானது. 7. நார்வே: நள்ளிரவு சூரியனை தரிசிக்கணுமா அப்போ நார்வே போங்க! இருட்டிடுச்சே என்ற கவலை இல்லாமல் உங்க லைசென்ஸை வைத்து 3 மாதம் நீங்க எங்க வேணும்னாலும் போகலாம். 8. நியூஸிலாந்து: குளிர்ந்த பூமியான நியூஸிலாந்தில் பயணம் செய்வது ஒரு த்ரில்லான அனுபவமா இருக்கும். இங்கு உங்க டிரைவிங் லைசென்ஸை வைத்து கவலைப்படாமல் ஒரு வருடம் சுற்றி வரலாம். இவை தவிர, நமது லைசென்ஸைக் கொண்டு 'தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, கனடா, ஸ்பெயின்' போன்ற நாடுகளிலும் ஜாலியா சுத்தலாம்..

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.