உங்களுக்கு ஆவிகளிடம் பேசத் தெரியுமா..?

  jerome   | Last Modified : 13 Feb, 2017 05:16 pm
நம்ம ஊர் திருவிழால கோவில் பூசாரிக்கு சாமி வரும். அப்படி சாமி வந்து, குறி சொல்றேன்ற பேர்ல என்னென்னமோ உளறுவாரு. அந்த புலம்பலையும் புண்ணிய வாக்கா நெனச்சு, நம்ம மக்கள் கால்ல விழுந்து கும்பிடுவாங்க. இது அத்தனையும் நடக்கணும்னா, சாமிக்கு படையல்னு சொல்லி சாராயம், சுருட்டு, ஆடு, கோழினு ஒரு லிஸ்ட்டே தேவைப்படும். இதெல்லாம், சாமிய நம்ம பக்கம் டைவர்ட் பண்றதுக்கு நம்ம ஆளுங்க கண்டுபிடிச்ச டெக்னிக். ஆனா, ஆவிகள கூப்பிடறது இவ்ளோ காஸ்ட்லி இல்லைங்க. ஒரே ஒரு மரப்பலகை போதும். அதுக்கு பேரு தான் ஓஜா போர்ட் ( Ouija Board ). தமிழ் சினிமா பேய்ப் படங்கள்ல பேய் இருக்கோ இல்லையோ, ஓஜா போர்ட் நிச்சயமா இருக்கும். காலேஜ் ஹாஸ்டல்ல லேட் நைட் என்டர்டெயின்மென்ட் - ல இதுவும் அடக்கம். உண்மையிலேயே ஓஜா போர்ட்ல பேசுனா ஆவி நம்ம கூட பேசுமா? இந்த டவுட் எல்லாருக்கும் இருக்கும். ஆவி பேசுதோ இல்லையோ..! ஓஜா போர்ட் பத்தி நம்ம கொஞ்சம் பேசுவோம். 1. ஓஜா போர்ட இப்பவரைக்கும் யாரு கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலைனு வரலாற்று ஆசிரியர்கள் சொல்றாங்க. 2. இத பயன்படுத்தி ஆவிகிட்ட பேசுறேன்னு சொல்றதெல்லாம் பொய்யாம். அது முட்டாள்தனமாம். Ideomotor effect - னு நம்ம மூளை நமக்குத் தெரியாமலே செய்யும் அனிச்சை செயல் தான் இதுன்னு அறிவியல் ஆசிரியர்கள் சொல்றாங்க. 3. முதல் உலகப்போரின் போது அமெரிக்கால 30 லட்சம் ஓஜா போர்ட் விற்பனை ஆச்சாம். போர்ல இறந்து போன ராணுவ வீரர்களின் சொந்தக்காரங்க தான் அதிகம் வாங்குனாங்களாம். 4. The exorcist ஆங்கிலப் பேய் படத்தை பார்த்த அப்புறம் தான், பயந்துபோய் வாங்குன போர்டலாம் திருப்பி கொடுத்துருக்காங்க. ( உயிர்மேல அவ்ளோ பயம் ) 5. OUIJA என்பதற்கு எகிப்திய மொழியில் GOOD BYE என்று அர்த்தமாம். 6. 1890 - களில் ஓஜா போர்ட ஒரு DATING GAME - ஆக யூஸ் பண்ணாங்களாம். ( ஆவி கூட ரொமான்ஸ் பண்ணிருப்பானுகளோ..? ) 7. Alcoholics anonymous அமைப்பைச் சேர்ந்த பில் வில்சன், குடிகாரர்களைத் திருத்த ஓஜா போர்டை பயன்படுத்தி 15 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த துறவியின் ஆவிகிட்ட 12 டிப்ஸ் வாங்குனதா சொல்லிருக்காரு. 8. ஓஜா போர்ட் தயாரிக்கும் உரிமை வாங்கி இருந்த வில்லியம் ஃபல்ட், இறக்கும் தருவாயில் தன்னோட பசங்க கிட்ட , ஓஜா போர்ட விக்காதீங்கன்னு சொல்லிட்டு இறந்தாராம். இப்படியாக, பல மர்மங்கள் ஓஜா போர்ட்ல ஒளிஞ்சுட்டு இருக்கு. சோ, தில்லா ட்ரை பண்ணி, ஆவிகிட்ட அடி வாங்கிடாதீங்க..!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close