முதலைகளுக்கு சாவு கிடையாது தெரியுமா??

  shriram   | Last Modified : 16 Feb, 2017 03:09 am

நம் உலகில் வாழும் சில உயிரினங்களுக்கு உண்மையிலேயே சாகாவரம் உண்டு... முதலையை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு முதலைக்கு இயற்கையாக வயதாகும் தன்மை கிடையாது... அதாவது வேட்டையாடப் படாமலோ, நோய் தாக்காமலோ, விபத்து ஏற்படாமலோ இருந்தால், ஒரு முதலை சாகாமல் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. ஆனால், வயதாகும் போது அதற்கேற்ப உருவத்தில் முதலைகள் பெரிதவதால், போதிய சாப்பாடு கிடைப்பது மிக கஷ்டம். எனவே, பெரும்பாலான முதலைகள், பசியாலும், நோய் தாக்கியும் தான் இறந்து போகின்றன. சாதாரணமாக, முதலைகள் 70 வருடங்களில் இறந்து விடுகின்றன. ஆனால், ஒரு முதலைக்கு பசியாற சாப்பாடும் கிடைத்து, நோய் ஏற்படாமலும் இருந்தால், அது எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் உயிர் வாழ்வதோடு, அதற்கேற்ப உருவத்தில் பெரிதாக வளரவும் வாய்ப்புள்ளது. உடலுக்கு வயதாகும் தன்மை இல்லாததால், ஒரு 7 வயது முதலையின் வேகமும், சுறுசுறுப்பும், ஒரு 70 வயது முதலைக்கு இருக்கும்!! படம்: 1957ல் ஆஸ்திரேலியாவில் வேட்டையாடப்பட்ட 28 அடி நீள முதலை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close