2 - ஆம் உலகப்போரில் வரலாற்று சாதனை படைத்த இந்திய ராணுவம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த நூற்றாண்டில் மறக்க முடியாத, இன்றைய உலக அரசியலுக்கு அடித்தளம் அமைத்த சம்பவங்களில் இரண்டாம் உலகப்போரும் ஒன்று. 1939 செப்டம்பர் 1 - ல் தொடங்கி 1945 செப்டம்பர் 2 வரை, சரியாக 6 வருடங்கள் 1 நாள் நடந்த இந்தப் போரில், இன்றைய வல்லரசாக விளங்கும் நாடுகளும் பங்கு கொண்டன. இந்த வல்லரசுகள் செய்யாத ஒரு வரலாற்று சாதனையை, அன்றைய பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய ராணுவம் நிகழ்த்தி உள்ளது. பிரிட்டிஷிற்கு ஆதரவாக சுமார் 25 லட்சம் இந்திய வீரர்கள் போரினை எதிர்கொண்டனர். இந்த வீரர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லை. மேலும், அன்றைய பிரிட்டிஷில் உயரிய விருதாகக் கருதப்படும் Victoria Cross பதக்கமும் 38 இந்திய ராணுவ வீரர்கள் பெற்றுள்ளனர். இந்தப் போரில் 87,000 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டும், 34,354 வீரர்கள் படுகாயமும் அடைந்தனர். இது தவிர, 67,340 பேர் போர்க்கைதிகளாக மாட்டிக் கொண்டார்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close