இது தாங்க இந்தியா...!

  jerome   | Last Modified : 18 Feb, 2017 01:47 pm

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே..! அதன் முந்தையர், ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து சிறந்ததும் இந்நாடே..!". ஆமா, நம்ம பாரத தாய்திருநாட்டிற்கு தான் இவ்ளோ புகழ்களும். இந்தியாவைப் பற்றி இன்னும் எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமலே இருக்கு. அதுல கொஞ்சம் கீழே இருக்கு தெரிஞ்சுக்கோங்க... 1. ஹரித்துவாரில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் "கும்பமேளா" தான் உலகிலேயே அதிகம் பேர் கூடும் திருவிழா. இதில், 10 கோடி பேர் கலந்து கொள்கின்றனர். 2. நம் நாட்டில், வீட்டிற்கு வீடு கழிவறை இருக்கின்றதோ.. இல்லையோ..மொபைல் போன் கண்டிப்பா இருக்குமாம். 3. பள்ளிகளில் படிக்கும் 61% குழந்தைகள், அவர்களின் கைகளில் உள்ள கிருமிகளால் நோய்தாக்குதலுக்கு உண்டாகிறார்களாம். 4. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாடுகளுக்கும் அடையாள அட்டை உள்ளதாம். 5. வரதட்சிணை தொடர்பான பிரச்சினையால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் இறக்கும் சம்பவம் இங்க மட்டும்தான் நடக்குதாம். 6. உலக நாடுகளுக்கு தேவைப்படும் 70% மசாலா பொருட்கள், இந்தியாவில் இருந்தே அனுப்பப்படுகின்றது. 7. உலகிலேயே கொத்தடிமைகள் அதிகம் இருக்கும் நாடும் இது தான். சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் கொத்தடிமைகளாக இருக்கின்றனராம். 8. பூமியின் மேற்கு அரை கோளப்பகுதியில் வாழும் மக்கள் தொகையை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாம். 9. வருடத்திற்கு 1 லட்சத்திலிருந்து 5 லட்சம் கருக்கலைப்பு சம்பவங்கள் நடக்கின்றதாம். சமீபத்திய ஆய்வின் அடிப்படையில், அதிக கருக்கலைப்பு சம்பவங்கள் சென்னையில் தான் நடக்கிறதாம். 10. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தினமும் 1 லட்சம் பேருக்கு அன்னதானமாக சைவ உணவு பரிமாறப்படுகின்றது. 11. உலகில் உள்ள தங்கத்தில் 11% இந்தியப் பெண்களிடம் தான் இருக்கின்றதாம். 12. இந்தியாவில் நடக்கும் 100 திருமணங்களில் 1 தான் விவகாரத்தில் முடிகிறதாம். உலகளவில் இந்தியா தான் விவாகரத்து சம்பவங்கள் குறைவாக நடக்கும் நாடு. 13. இன்டர்நெட் பயன்படுத்துவதில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. 14. மும்பை, டெல்லி நகரங்களில் இருப்பதை விட இந்திய உணவகங்கள் லண்டனில் தான் அதிகம் உள்ளதாம். 15. குஜராத்தில் ஒரே ஒரு நபருக்காக வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் நடத்துவதும் இந்தியா தான். நம் பாரத தேசத்தின் பெருமைகளையும், அதைவிட அதிகமான அவலங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.