"கிளப்" பிற்கும் 'பப்" பிற்கும் "பவுன்ஸர்" களை உருவாக்கும் கிராமம்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மேற்கத்திய கலாச்சாரங்கள் விரைவாக பரவிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் இரவு நேர கேளிக்கை விடுதிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த "கிளப்" "பப்" களில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க, ஆஜானபாகுவான உடற்கட்டை உடைய "பவுன்ஸர்கள்" பயன்படுத்தப் படுகின்றனர். டெல்லி அருகே உள்ள அசோலா பதேபூர் பெரி எனும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இந்த வேலைக்காக தயாராகின்றார்கள். காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் இவர்களால், 350 கிலோ எடை கொண்ட இரு சக்கர வாகனத்தை தனி ஒருவராக தூக்கிவிட முடிகின்றது. இந்தியாவில் வலுவான கிராமம் என்றால் அது பதேபூர் பெரி தான். இங்குள்ள ஆண்கள் தங்களுடைய 15 வயதில் இருந்தே உடற்பயிற்சியை தொடங்கி விடுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close