என்ன சொல்றீங்க..? பீஹார் தாத்தா தாஜ்மஹாலை வித்துட்டாரா...!

  jerome   | Last Modified : 18 Feb, 2017 04:46 pm
ஒரு தடவ, ரெண்டு தடவ இல்ல.. மொத்தமா 3 தடவ தாஜ்மஹாலை வித்துருக்காரு, பீஹார் தாத்தா ஒருவர். தாஜ்மஹால் மட்டும் இல்ல, டெல்லி செங்கோட்டை மற்றும் 545 உறுப்பினர்களோடு சேர்த்து இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தையும் விற்று "லம்ப்" பான தொகையை பார்த்துட்டாரு இந்த பீஹார் தாத்தா. யார் இந்த பீஹார் தாத்தா..? இவரோட பெயர் மிதிலேஷ் குமார் ஸ்ரீவத்சவா, ஆனால், எல்லாரும் இவரை "நட்வர்லால்" னு தான் கூப்பிடுவாங்க. 1912 - ல் பிறந்த நட்வர்லால் ஒரு வக்கீல். இருந்தாலும், இவரோட திறமை இவருக்கு நல்லா தெரிஞ்சதுனால, இந்தியாவிற்கு வரக்கூடிய வெளிநாட்டுப் பயணிகளை அழகாக ஏமாற்றி தாஜ்மஹாலை 3 தடவை வித்துருக்காரு. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்தின் கையெழுத்தை போடத்தெரிந்த இவர், இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளை ஈஸியாக செஞ்சுருக்காரு. 8 மாநிலத்துல மொத்தமா சேர்த்து 100 வழக்குகள் இவர் மேல இருக்கு. இதுவரைக்கும் 10 தடவை ஜெயில்ல இருந்து எஸ்கேப் ஆன இவர், ஒரு தடவ போலீஸ் ட்ரெஸ்ஸ திருடி போட்டுக்கிட்டு, ஜெயிலின் மெயின் கேட் வழியாகவே 'தில்லா' வெளிய வந்துருக்காரு. கடைசியா 1996-ல இவரோட 84-வது வயசுல எஸ்கேப் ஆக ட்ரை பண்ணி மாட்டிக்கிட்டாரு. அந்த சமயம் இவருக்கு உடம்பு சரி இல்லாம டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறப்போ தாத்தா எஸ்கேப் ஆகி ஓடிட்டாரு. இன்னும் இவருக்கு 113 வருஷம் சிறைத் தண்டனை பாக்கி இருக்கு. 1996-ல எஸ்கேப் ஆன நட்வர்லால் தாத்தாவ இன்னும் கண்டுபிடிக்க முடியல. ஆனா, அவரோட லாயர்ஸ், தாத்தா 2009, ஜூலை 25 ஆம் தேதி இறந்துட்டதா சொல்றாங்க.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close